காங்கிரஸ் கட்சி மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது- முரளிதரராவ்

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசுகையில்,காங்கிரஸ் கட்சி மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான

சென்னையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்களுக்கான திட்டங்களை வெளிப்படையாக நிறைவேற்றி வருபவர் பிரதமர் மோடி என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசுகையில்,காங்கிரஸ் கட்சி மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குடும்ப அரசியல், மதஅரசியல் செய்து வருகின்றன. பாஜக கட்சி வித்தியாசமான அரசியல் கட்சி.மக்களுக்கான திட்டங்களை வெளிப்படையாக நிறைவேற்றி வருபவர் பிரதமர் மோடி.

இன்றைய சூழலில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.பாகிஸ்தான் செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

காவிரி பிரச்னையில் நல்ல முடிவை எடுக்க பாஜகவிற்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். ஊழலில் ஈடுபட்ட கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளன என்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.