பள்ளிமாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து, பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக மோசடி . தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.