#புயல்: நவம்பர் 25-ஆம் தேதி மகாபலிபுரம் இடையே புயல் கரையை கடக்கிறது.!

The Chennai Meteorological Department has forecast that the cyclone will cross the border between Mahabalipuram on November 25

நவம்பர் 25-ஆம் தேதி மகாபலிபுரம் இடையே புயல் கரையை கடக்கிறது என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வருகிற 25ஆம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது இதனால், கன மழைககு வாய்ப்பு இருக்கிறது.

பல மாவட்டங்களில் கனமழை:

காரைக்கால் அருகே நம்.25 கரையை நெருங்கும் என்பதால் 23,24,25 கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நவம்பர்-24,25 வங்கக் கடலின் மத்தியப் பகுதியில், தமிழக, புதுவை கரையோரம் பலத்த சூறாவளி காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.