#Breaking : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் மேலும் நீட்டிப்பு.!

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கோரி தமிழக மின்சாரத்துறை அறிவித்து இருந்தது. கடந்த வருடம் டிசம்பர் 31 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் தொடர்ந்து இந்த இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது , இறுதியாக இன்று தான் கடைசி நாள் என்று மின்சாரத்துறை அறிவித்து இருந்தது. அதில், இன்று காலையில் கூட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றே கடைசி நாள் இன்று மாலைக்குள் ஆதார் எண் – மின் இணைப்பு எண்ணை இணைத்து விடுங்கள் என பதிவிட்டு இருந்தார்.

தமிழகத்தில் மின் பகிர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இதில் இதுவரையில் 2.60 கோடி பேர் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துள்ளனர் . 7 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை. இதன் காரணமாக தற்போது மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசம் இம்மாதம் இறுதி வரையில் (பிப்ரவரி 28) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.