ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடை பெற்று வருகிறது.ஆனால் சசிகலா குடும்பத்தினர் தனித்து விடப்பட்டனர்.இந்த சமயத்தில் தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதற்கு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.அதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெரும் என்றும்,தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை பெரும் என்று தெரிவிக்கப்பட்டது.
unknown nodeஇது தொடர்பாக ஈரோட்டில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,மக்களவை தேர்தலில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் அதிமுக தோல்வி அடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவர் தெரிவித்த இந்த கருத்து அதிமுக வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.