இன்று முதல் கல்லூரிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி.!

The colleges for all undergraduate and postgraduate final year students will be opened in Pondicherry from today.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கல்லூரிகள் இன்று திறப்பதால் மத்திய சுகாதார அமைச்சகத்தின் படி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.