லோக் ஆயுக்தா தேர்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தேடுதல் குழுவை தேர்வு செய்வதற்கான, தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வுக்குழுவின் உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இருப்பினும் முதலமைச்சர் அறையில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் ஆலோசனை நடத்தினர். இதில், அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
லோக்ஆயுக்தா தேர்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்...!!
லோக் ஆயுக்தா தேர்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி லோக் ஆயுக்தா சட்டம்