முதல் முறையாக பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்!

The first-ever medical consultation for general students starts online today!

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் பிப்.5ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறுகிறது.

மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு  இன்று முதல் தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது.

இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.பிப்.5 ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.முதல் முறையாக இந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.

அதன்பின்னர்,பிப்.7 முதல் 10 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து,இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் பிப்.15ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து,பிப்.22 ஆம் தேதி முதல் மாணவர்கள் அசல் சான்றிதழை சமர்பித்து கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.