முத்திரை பதித்த முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து காலை 10:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே, 5 முறை இது போன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற இருக்கிறது.
தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும், விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
