பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை – அமைச்சர் தங்கமணி

Minister Thangamani said action would be taken from January to fill the posts of Assistant Engineer and Technical Personnel in the E-Board.

மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் 10,000 பணியிடங்கள் நிரப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, மின் வாரியத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.