கிணற்றில் மூழ்கி இறந்த இளம்பெண்! கண்களை தானம் செய்த பெற்றோர்!

A teenager who went to a farm well for a bath fell into a well and died. Parents who donated people’s eyes.

குளிப்பதாற்காக விவசாய கிணற்றிற்கு சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. மக்களின் கண்களை தானம் செய்த பெற்றோர்.

செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இவர்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் இளைய மகள் சுதா கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க உள்ளதால், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, இவர்களது சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்று உள்ளனர்.

பெற்றோருடன் வந்த இளைய மகள் சுதா, குளிப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார். அந்த கிணற்றில் இவர் படிக்கட்டில் அமர்ந்து கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இவருக்கு நீச்சல் தெரியாத நிலையில், தண்ணீரில் தத்தளித்து நீரில் மூழ்கி இறந்துள்ளார்.

மகள் இறந்த துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், மகளின் கண் மூலம் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கொடுக்கலாமே என எண்ணி அவர்களது பெற்றோர் செய்யாறு தன்னார்வ அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின் அவர்கள் உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையினர் சுதாவின் கண்களை தானமாக பெற்றனர். பெற்றோரின் இந்த செயல் கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.