தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க தமிழக அரசு அரசாணை..!

The Government of Tamil Nadu has issued permission to pay the revised salaries of the employees of the Tea Plantation Corporation.

தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் 212 ஊழியர்களுக்கான ஊதியம் இந்த ஆண்டில் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில்,தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம், படிகள் மற்றும் தொடர்புடைய சலுகைகள் திருத்தம் குறித்து தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விதிகள், 2017 இல் வெளியிடப்பட்ட அரசின் ஆணைகளை அமல்படுத்த தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் நிர்வாக இயக்குநருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

unknown node