மாணவர்களுக்கு 2-ஜிபி இலவச டேட்டா – அரசாணை வெளியீடு!

the Government Publication to give free data cards with usage capacity of 2 GB per day between January to April

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2-ஜிபி இலவச டேட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (2 GB Data) பெற்றிட எல்காட் நியாத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில்கல்லூரி மாணவர்களுக்கு தினமும்2-ஜிபிஇலவச டேட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு 2-ஜிபி இலவச டேட்டா – அரசாணை வெளியீடு!