7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது-சுப்பிரமணியன் சுவாமி 

7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை  உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.மேலும் வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது, மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.