கோகுல்ராஜ் கொலை வழக்கு.! திருச்செங்கோடு கோவில் செல்லும் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.!

கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக பதியப்பட்டுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக பதியப்பட்டுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியாக மாறினார். இதனை அடுத்து, பிறழ் சாட்சி சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும், கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக பதியப்பட்டுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அங்கு கோகுல் ராஜும், சுவாதியும் கோவிலுக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளன. வெளியே வரும் காட்சிகள் அதில் பதிவாக வில்லை.

ஆதலால், ஜனவரி 22ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று வெளியே செல்வதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆராய உள்ளனர்.