சட்ட விரோத காவலில் செந்தில் பாலாஜி.? உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அவர் மனைவி தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Minister Senthilbalaji

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அவர் மனைவி தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

சட்ட விரோத பணம் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த மாதம் 13ஆம் தேதி கைது செய்யபட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறார். மேலும் அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் என்றும் அவரை நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 27ஆம் தேதி நிறைவடைந்தது இதனை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு  இன்று காலை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.