10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி.! தேர்வு தேதி நீட்டிப்பு.!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கடைசி தேதி மார்ச் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கடைசி தேதி மார்ச் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 12,11,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் எழுத்துத்தேர்வுகள் தொடங்குகின்றன.

மார்ச் 31 :

தற்போது அவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த செய்முறை தேர்வுகள்  இன்று (மார்ச் 29) முடியவடைய உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்த மாணவர்களை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த செய்முறை தேர்வுகளுக்கான இறுதி நாளை மார்ச் 31வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை :

இந்த உத்தரவை முறையாக செயல்படுத்த அரசு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி அவர்கள் தேர்வெழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.