1000 ரூபாய் பொங்கல் பரிசை வங்கி கணக்கில் செலுத்த இயலுமா.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

1000 ரூபாய் பொங்கல் பரிசை வங்கி கணக்கில் செலுத்த இயலுமா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

1000 ரூபாய் பொங்கல் பரிசை வங்கி கணக்கில் செலுத்த இயலுமா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு இந்தாண்டு பொங்கல் பரிசு தொகையாக அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களுக்கு ரூபாய் 1000 பரிசு தொகையும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை வழங்குகிறது.

இதில் பரிசு தொகை 1000 ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த கோரி தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்து இருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா? என தமிழக அரசிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தற்போது காலம் குறைவாக இருப்பதாலும், சில வங்கிகள் மினிமம் தொகை இருப்பு இல்லை என பிடித்தம் செய்து கொள்வார்கள் எனவும்  இதனால் அனைவருக்கும் உரிய பலன் கிடைக்காது என பதில் அளித்தார்.

ஆதார் எண் – மின் இணைப்பு எண் இணைப்பது போல இதனையும் நடைமுறைப்படுத்தலாமே என கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.