1967-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரானார் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் நிறுவனர் அண்ணா.1969 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தார்.
அண்ணாவின் முக்கிய திட்டங்கள்:
அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றினார்.
இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை தமிழக மக்களின், மாணவர்களின் மனதில் கொண்டு, இந்திய முழுவதும் மும்மொழி திட்டம் அமலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொண்டுவந்து தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.
ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூ .1-க்கு படி அரிசி வழங்கியது.
பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.