தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Heavy Rain

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. நேற்று இரவு சென்னை சுற்றுவாட்டார பகுதிகளில் இரவு முழுக்க இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. செங்கல்பட்டு பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது.

மேலும், விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.