அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கும் உங்களுக்கும் மிக முக்கியமானது – ஆளுநர் ஆர்.என்.ரவி

மோடியின் பேச்சை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

மோடியின் பேச்சை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கும் உங்களுக்கும் மிக முக்கியமானது. 2047-ல் இந்தியா வல்லரசு ஆகும்போது நீங்கள் என்னவாக நினைக்கின்றீர்கள் என நினைத்து தற்போது அதற்கான பணியில் ஈடுபடுங்கள். 7000-ம் இந்திய மாணவர்களை மீட்பதற்காக மோடி அறிவுறுத்தலால் உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மிலாதுநபி திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், அமைதியை உலகெங்கிலும் பரப்பிய, முகமது நபியின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து, அவரை போற்றி மகிழ்வோம் எனவும் உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.