அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் இல்லாத குடியரசு தினவிழா கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலீசாரின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில், பிளாஸ்டிக் கொடி, தோரணம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக பள்ளி, கல்லுாரிகள் உட்பட, அனைத்து இடங்களிலும், பிளாஸ்டிக் இல்லாத குடியரசு தினவிழா கொண்டாட வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.