103 வயதிலும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி

The old woman who voted 103 years ago

ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது.அதே நேரத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதில் நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 வாக்குசாவடியில் நடைபெற்றது.

இந்நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 103 வயதை தாண்டிய மூதாட்டி துளசியம்மாள் தனது வாக்கை பதிவு செய்து உள்ளார்.

வாக்களிக்கும் ஆர்வம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் தனது வயதை கூட பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.