கோவை கார் வெடிப்பு.! திருநெல்வேலியில் தொடரும் சோதனை.!

By

கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக, நெல்லை, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் லெப்பை என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 

கோவை, உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இவரது வீட்டில் இருந்து 75 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

முபின் உடன் தொடர்பில் இருந்ததாக முதற்கட்டமாக முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில்  ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர் .

அதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில், அப்சர் கான் என்பவர் 6வது கநபராக கைது செய்ப்பட்டார். அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக, நெல்லை, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் லெப்பை என்பவரது வீட்டில் நெல்லை மாநகர் துணை ஆணையர் அனிதா தலைமையில் காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை சுமார் 4 மணிநேரமாக நீடித்து வருகிறது. இவரிடம் உள்ள லேப்டப், செல்போன் உள்ளிட்ட சாதனங்களை நடமாடும் ஆய்வு மையம் மூலம் சோதனை செய்து வருகின்றனர். முகமது உசேன் கோவையில் மதகுருவாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

Dinasuvadu Media @2023