கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.மேலும் போலீசார் பல மாநிலங்களிலும் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள தங்க நகைகளை கொள்ளையடித்தது சென்றனர்.இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில் கொள்ளையன் முருகன் கும்பல் தான் கொள்ளையடித்தது தெரியவந்தது.பின்னர் இந்த கும்பல்தான் சமயபுரத்தில் நடைபெற்ற கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்தது. போலீசார் 9 மாதங்களாக திணறி வந்த இந்த வழக்கில் தற்போது கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர்.இதனால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடித்ததால் இரண்டு போலீசார்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்படி திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் விஜயகுமார் ஒப்பிலியப்பன் கோவிலிலும் , ஹரிஹரன் என்பவர் சமயபுரத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொள்ளையன் கைது செய்யப்பட்டதால் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..!
கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களை