முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடை விதிக்க மறுப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர்  மாதம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசையும், முதல்வரையும்

கடந்த ஆண்டு செப்டம்பர்  மாதம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேட்டியளித்ததாக கூறி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் சீமான் மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி  சீமான் மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.

மேலும் சீமான் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மார்ச் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.