ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்.!

ஆளுநருக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநருக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் செயல்பாடுகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய மதியம்  1 மணிக்கு மேலாக  நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மூலம் சபாநாயகர் அப்பாவு  குரல் வாக்கெடுப்பு நடத்தினார். சட்டப்பேரவையில் அதிமுகவினர் கொடுத்த தீர்மானங்களை முன்மொழிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அரசினர் தீர்மானம் உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

பிறகு அதிமுகவினரின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பு நடத்தினார்.

அந்த குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசினார். இதனை அடுத்து இறுதியாக இந்த தீர்மானத்திற்கு எதிராக யாரும் குரல் வாக்கெடுப்பில் வாக்களிக்காத காரணத்தால் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.