குடிநீரில் மனிதக்கழிவு.! தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு.!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அடுத்து வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 20 பேருக்கு  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இதுவரை 70 சாட்சியங்களிடம் சாட்சிகள் பதிவு செய்யபட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்ட காவல்துறை குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் , அந்த குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை சென்னைக்கு தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சார்பில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக கூறியுள்ளனர்.