உயிரிழந்த தந்தையின் முன்பு மகன் செய்த நெகிழ்ச்சியான செயல்! கண்கலங்கிய உறவினர்கள்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருக்கு வயது 50. இவரது மகன் அலெக்ஸ்சாண்டர் (29). அலெக்ஸ்சாண்டருக்கும்,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருக்கு வயது 50. இவரது மகன் அலெக்ஸ்சாண்டர் (29). அலெக்ஸ்சாண்டருக்கும், அவருடன் இணைந்து வேலை செய்யும் பாலசுந்தரன் மகள் ஜெகதீஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில்,அடுத்த மாதம் 2-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், அலெக்ஸ்சாண்டரின் தந்தை தெய்வமணிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தெய்வமணி நேற்று மதியம் காலமானார். தெய்வமணியின் இழப்பால் வேதனையில் ஆழ்ந்த குடும்பத்தினர் மத்தியில், அலெக்ஸாண்டர் தனது தந்தையின் முன் திருமணம் நடக்க வேண்டும் என நினைத்து, பெண் வீட்டாரிடம் பேசியுள்ளார்.

unknown node

அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், ஜெகதீஸ்வரி சிங்கனூர் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின் உயிரிழந்த தெய்வமணிக்கு புத்தாடைகளை உடுத்தி, கட்டிலில் அமர வைத்து, தெய்வமணி கையால் தொட்ட மாங்கல்யத்தை எடுத்து, அலெக்ஸ்சாண்டர் ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டி திருமணம் செய்து கொண்டார்.

அலெக்ஸ்சாண்டரின் இந்த செயல், உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.