கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை எழுதி ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை எழுதி ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை எழுதி ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,  அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆவின் பொருட்கள் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். முதலில் டெல்லியில் ஆவின் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம்.

கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை எழுதி ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது. முதல்வரை எதிர்க்க தெம்பும், திராணியும் இல்லாதவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.