ஓபிஎஸ் சொன்ன கதை சசிகலாவுக்கு பொருந்தாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

AIADMK ex-minister Jayakumar retaliated by saying that the short story told by OPS did not apply to Sasikala.

ஓபிஎஸ் சொன்ன குட்டிக் கதை சசிகலாவுக்கு பொருந்தாது என காட்டமாக பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் திருந்தினால் பெரிய மனதோடு ஏற்பது மனித இயல்பு, ஆனால் சசிகலாவிற்கு மன்னிப்பு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

ஓபிஎஸ் சொன்ன கதை பாமர மக்களுக்கு பொருந்தும், ஆனால் சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த தொடர்புமே இல்லை என காட்டமாக ஓபிஎஸ் சொன்ன குட்டி கதைக்கு பதிலடி கொடுத்தார்.

தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்வதே சிறந்த தலைமை அழகு என்று சென்னையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குட்டி கதை ஒன்றை தெரிவித்திருந்தார். ஓபிஎஸ்ஸின் இந்த பேச்சு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.