காவேரியில் தண்ணீர் திறக்க வேண்டும்.! காவேரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழக அரசு கடிதம்.!

காவேரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

Kaveri River Mettur Dam

காவேரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி காவிரி நதியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு 34 டிஎம்சி அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு காவேரி நதியில் இருந்த திறந்து விட வேண்டும்.

இதனை குறிப்பிட்டு தமிழக நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா மத்திய நீர்வளத்துறைக்கும், காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜூலை மாதத்திற்குள் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு காவிரி நதியிலிருந்து திறந்து விட வேண்டும் அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே போதுமானதாக இருப்பதால் அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.