ரேஷனில் குறைந்த விலைக்கு தக்காளி – தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. பல மாவட்டங்களில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று ரூ.130 க்கு

TomatoPrice

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. பல மாவட்டங்களில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று ரூ.130 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தக்காளியை அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். இதற்கிடையில், மதுரை மாவட்டம் ஆண்டிபட்டியில் சில்லறை விலையில் 1 கிலோ தக்காளி ரூ.150க்கு விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரம்:

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி 1 கிலோ ரூ.90ஆக குறைந்தது, நேற்று 130க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 40 குறைந்தது  என்று தகவல் வெளியாகியுள்ளது.