தமிழகத்தில் பல இடங்களில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு, வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், விவசாயிகளை பாதிக்கும் எந்தவித திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தாது என தெரிவித்துள்ளார்.