74வது குடியரசு தின விழா.! முதல் பரிசை தட்டிச்சென்ற காவல்துறை.!

சென்னை மெரினாவில் தமிழக அரசின் பல்வேறு துறையினர் சார்பில் 74வது குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியின் முதல் பரிசு தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டது.

சென்னை மெரினாவில் தமிழக அரசின் பல்வேறு துறையினர் சார்பில் 74வது குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியின் முதல் பரிசு தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டது.

இன்று இந்தியா முழுவது 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தமிழக அரசு சார்பில் சென்னையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மெட்ரோ பணிகள் நடைபெறும் காரணத்தால் இந்தாண்டு வழக்கமாக நடைபெறும் காமராஜர் சாலை காந்தி சிலை அருகே விழா நடைபெறவில்லை. மாறாக மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இந்த விழா நடைபெற்றது .

unknown node

முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ரவி :இந்த விழாவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் காலை 8 மணி அளவில் வந்தனர். அதன் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.  அதன் பிறகான பல்வேறு துறைகளின் அணிவகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

unknown node

அணிவகுப்பு ஊர்திகள் :அந்த அணிவகுப்பில், கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படை  என முப்படையினர், கடலோர காவல் படையினர், தமிழக காவல்துறையினர், சிறைதுறை, வனத்துறை, தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர், மக்கள் தொடர்பு துறை, செய்தி துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் அணிவகுப்பும், அந்தந்த துறைகளின் அலங்கார ஊர்திகளும் வலம் வந்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.

unknown node

தமிழக காவல் துறை :இதில் முதலிடம் தமிழக காவல் துறையினர் தயார் செய்த கிடைத்தது. இரண்டாம் இடம் தமிழக தீயணைப்பு துறையினருக்கு கிடைத்தது. மூன்றாம் இடம் செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு கிடைத்தது.