#Breaking: 27 மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு…!

27 மாவட்டங்களுக்கிடையே வரும் 28 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில்,27 மாவட்டங்களுக்கிடையே வரும் 28 ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தற்போது அறிவித்துள்ளது.
27 மாவட்டங்கள்:
சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி,திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி,தூத்துக்குடி, விழுப்புரம்,வேலூர் மற்றும் விருதுநகர்,
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025