100 சதவீதம் தாழ்தள பேருந்துகளை வாங்குவது சாத்தியமில்லை.! போக்குவரத்துத்துறை  நீதிமன்றத்தில் விளக்கம்.!

100 சதவீதம் தாழ்தள பேருந்துகளை வாங்குவது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

100 சதவீதம் தாழ்தள பேருந்துகளை வாங்குவது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு அண்மையில் 1,107 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. அதில், தாழ்தள பேருந்துகள் பற்றி குறிப்பிடபடவில்லை என்றும், தாழ்தள பேருந்துகளானது மாற்று திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் பயணிக்க எதுவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

மேலும், 100 சதவீதமும் தாழ்தள பேரூந்துகளாக வாங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில், போக்குவரத்துக்கு துறை விளக்கம் கூறுகையில், 100 சதவீத பேருந்துகளை தாழ்தள பேரூந்துகளாக வாங்குவது சாத்தியமில்லை. எனவும்,

மேலும், தாழ்தள பேருந்துகள் இயங்குவதற்கு சரியான சாலை வசதி தற்போது இல்லை எனவும், தாழ்தள பேருந்து வாங்குவதற்கு 80 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. ஆனால், சாதாரண பேருந்து வாங்குவதற்கு 40 முதல் 45 லட்ச ரூபாய் தான் செலவு ஆகிறது. தாழ்தள பேருந்துகளை இயக்க 1 கிமீக்கு 41 ரூபாய் செலவு ஆகும். ஆனால், சாதாரண பேருந்தை இயக்குவதற்கு ஆகும் கட்டணம் குறைவு தான் எனவும் இதனால் 100 சதவீதம் தாழ்தள பேருந்துகளை வாங்குவது சாத்தியமில்லை எனவும் போக்குவரத்து துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள்ளது.