புதுச்சேரி கனமழை: ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண் மாயம்- தேடும் பணி தீவிரம்!

A woman who went to rescue a scooter that was swept away in the floods, who has been swept away by the floods in Pondicherry.

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் தொடர்ந்து 6 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள வாய்க்காலின் அருகே உள்ள வீட்டில் ஹசீனா பேகம் என்ற பெண் ஒருவர் வசித்து வந்தார்.

தற்பொழுது புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அவரின் ஸ்கூட்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைமீட்பதற்காக சென்றபோது அவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் அடித்து சென்ற அந்த பெண்ணனை மீட்பதற்காக பொதுமக்கள் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

தண்ணீர் வடிந்தவுடன் தேடியபோது அவரின் ஸ்கூட்டர் மட்டுமே இருந்தது. ஆனால் அந்த பெண்ணை காணவில்லை. இதனைதொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் போலீசார், அந்த பெண்ணை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த 6 மணிநேரம் பெய்த கனமழையால் இதுவரை 3 பேர் காணாமல்போனது, குறிப்பிடத்தக்கது.