பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்

பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில், பிற வகுப்புகளை திறக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025