எம்ஜிஆர் நூற்றாண்டு நுழைவாயில் வளைவு_வை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது என்று அமைச்சர் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சார்பில் நுழைவுவாயில் மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு நுழைவாயில் வளைவு_வை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று திறந்துவைத்தார்.இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் , நமது கட்சியின் கூட்டணியை வெல்வதற்கு எந்த கட்சியும் தமிழகத்தில் கிடையாது.தற்போது அமைந்துள்ள கூட்டணியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துதார்.