அட்சய பாத்திரத்தை பறித்துக்கொண்டு, பிட்சை பாத்திரத்தை கொடுக்க துடிக்கிறார்கள் – முக ஸ்டாலின்

True AIADMK volunteers will never forget that Palanisamy was the one who mortgaged the AIADMK out of selfishness - Stalin

சுயநலத்தால் அதிமுகவை அடமானம் வைத்தவர் பழனிசாமி என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் மறக்கமாட்டார்கள் – முக ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை முக ஸ்டாலின் மணிமேகலை இலக்கியத்துடன் ஒப்பிட்டு பேசிய பின், இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் கையில் இருக்கும் அட்சயபாத்திரத்தை பறித்துக்கொண்டு, மீண்டும் பிட்சைபாத்திரத்தை கொடுக்க துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இலவச அரிசியில் ஊழல், மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய அரிசியை விற்றுவிட்டார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் என்று குற்றசாட்டியுள்ளார். பருப்பு ஊழல், காவிரி விவசாயிகளுக்கு துரோகம், வேளாண் சட்டத்துக்கு ஆதரவு என முதல்வர் பழனிசாமியின் துரோகத்தை கூறிக்கொண்டே போகலாம் என்றும் கபட நடிப்பால் பதவியை பெற்று, வஞ்சகத்தால் துரோகம் செய்து, சுயநலத்தால் அதிமுகவை அடமானம் வைத்தவர் பழனிசாமி என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் மறக்கமாட்டார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.