பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை.! திருமங்கலம் ஊராட்சி கவுன்சிலர்களுக்கு வலைவீச்சு.!

திருமங்கலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து நாகலட்சுமி என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவல்துறையினர தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

திருமங்கலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து நாகலட்சுமி என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவல்துறையினர தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதால்  கருணை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் நாகலெட்சுமிக்கு 100 நாள் வேலைத்திட்ட பொறுப்பாளர் வேலை வழங்கியதாக கூறப்படுகிறது.

பணியிடத்தில் தொந்தரவு :

unknown node

100 நாள் வேலை பொறுப்பாளராக இருந்த நாகலட்சுமி கடந்த ஒன்றரை வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் ஒரு சில நாட்களாக அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஊராட்சசி மன்ற கவுன்சிலர்கள் நாகலெட்சுமிக்கு பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை :

unknown node

இதில் மனமுடைந்த நாகலட்சுமி, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தனது குழந்தைகளுடன் அரசு பேருந்தில் சென்று கொண்டு இருக்கும் போது, தனது குழந்தைகளை அருகில் உள்ள சக பயணியிடம் கொடுத்து, தற்கொலை கடிதத்தையும் வைத்துவிட்டு , பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தலைமறைவு – தனிப்படை :

unknown node

அவரை உடனடியாக மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் குறிப்பிட்ட தற்கொலை கடிதத்தை மையாக கொண்டு, தலைமறைவாகி உள்ள கவுன்சிலர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.