திருமாவளவன் மீண்டும் சாதி அரசியலை கையிலெடுக்கிறார்...! – எல்.முருகன்

The BJP will block any attempt to force Annal Ambedkar into a caste.

அண்ணல் அம்பேத்கரை ஒரு ஜாதிக்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அதை பாஜக தடுக்கும்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள், மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்   செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர். அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதிக்கான தலைவர் அல்ல என்பதை அனைவரும்தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அண்ணல் அம்பேத்கரை ஒரு ஜாதிக்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அதை பாஜக தடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பாஜகவினர் மீது திட்டமிட்டு விசிகவினர் தாக்குதல் நடத்துவதாகவும், அப்படிப்பட்ட ரவுடிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.  அதுவரை பாஜக ஓயாது என்றும், வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் போய் விட்டது. அதனால் தான் திருமாவளவன் மீண்டும் சாதி அரசியலை கையில் எடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.