திருப்பரங்குன்றம் விவகாரம் : மதுரை காவல் ஆணையர் காணொலி வழியே ஆஜர்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

Featured image

சென்னை :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி தொடர்பான சர்ச்சையில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “நீதித்துறை சட்டம்-ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது; நீதிமன்றத்தின் மாண்பை பின்பற்ற வேண்டும்” என்ற அரசு வாதத்தை ஏற்கவில்லை. இதன் மூலம் தனி நீதிபதியின் உத்தரவு முழுமையாக நிலைத்து நிற்கிறது. நவம்பர் 28 அன்று தனி நீதிபதி சுவாமிநாதன், கோயில் நிர்வாகத்தை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

சிவில் நீதிமன்ற உத்தரவு (பிரிவி கவுன்சில் அங்கீகாரம்) அடிப்படையில், மலை உச்சி கோயில் சொத்து என்று தீர்மானித்தது. அரசு, “இது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும்” என்று எதிர்த்து மேல் முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அமர்வு, “மத நல்லிணக்கம் ஒரு தரப்பின் மதச் செயல்பாடுகளைத் தடுப்பதால் ஏற்படாது. அது ஒன்றாக வாழ்வதன் மூலம் மட்டுமே சாத்தியம். வருடத்திற்கு ஒரு முறை யாரையும் பாதிக்காமல் தீபம் ஏற்றுவதில் என்ன சிரமம்?” என்று கேள்வி எழுப்பி, அரசின் வாதத்தை நிராகரித்தது.

நேற்று (டிசம்பர் 3) காலை அனுமதி கோரி வந்த பக்தர்கள், போலீஸ் 144 தடை உத்தரவால் தடுக்கப்பட்டனர். இதனால் ஹிந்து முன்னணி உள்ளிட்ட 13 பேர் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர். நீதிபதி சுவாமிநாதன், CISF பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். போலீஸ், “மேல் முறையீடு காரணமாக அனுமதிக்க முடியாது” என்று தடுத்தது. இதனால் கோயில் சாலை தடுக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் அவசரத் தேவைகளுக்குப் பாதிக்கப்பட்டனர். போலீஸ்-பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வழக்கில் மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் வீடியோ கான்பரன்ஸில் மாலை 5.30 மணிக்கு ஆஜராக வேண்டும்; இல்லையேல் தீவிரமான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எக்காரித்து இருந்த நிலையில், காணொளி மூலமாக ஆஜர் ஆனார்.எங்களது நோக்கம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது, மதிக்கக்கூடாது என்பதல்ல” 5 நிமிடங்களில் ஆஜரான ஆணையர்விளக்கமும் அளித்துள்ளார்.