இது சாதாரண வெற்றி அல்ல, தமிழ்நாட்டோட வெற்றி - எஸ்.ஏ.சி மகிழ்ச்சி பொங்க பேட்டி

விஜய் தனியாக நின்று, எந்த ஊழல்வாதிகளுடனும் கூட்டணி வைக்காமல், மக்களை நம்பி போட்டியிட்டார் என எஸ்.ஏ.சி தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் கட்சி பெரும் வெற்றி விழும்பில் இருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் (எஸ்.ஏ.சி) மகிழ்ச்சி பொங்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது“மூன்றாவது கட்சியாக தொடங்கி, தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் விஜய்.

இது சாதாரண வெற்றி அல்ல. இது தமிழ்நாட்டின் வெற்றி.தி.மு.க.வை எடுத்துக்கொண்டால், 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் விஜய் தனியாக நின்று, எந்த ஊழல்வாதிகளுடனும் கூட்டணி வைக்காமல், மக்களை நம்பி போட்டியிட்டார். அந்தத் தைரியமே பெரிய விஷயம். மக்கள் அவரைத் தனியாகத் தேர்ந்தெடுத்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று நம்பினார்.

அதனால் இந்த வெற்றி மிகப் பெரியது.அரசியலுக்கு நான் போக விரும்பவில்லை. நீங்கள் என்னிடம் தந்தையாக என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதால் பதில் சொல்கிறேன். விஜய் எனக்கு மகன் மட்டுமல்ல, தலைவரும் கூட. அவருக்கு யார் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

அவருக்கு 51 வயது ஆகிறது. அவர் எல்லாவற்றையும் தானே முடிவு செய்யும் தகுதியும், திறமையும் பெற்றுவிட்டார். கடந்த இரண்டு வருடங்களாக அவரது பணியை நெருக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் சரியான முடிவுகளை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.எஸ்.ஏ.சி-யின் இந்தப் பேட்டி, தவெகவின் வெற்றிக்குப் பிறகு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.