முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காலை நடைப்பயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்து,உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.இதுவே,அவரது பிட்னஸ் ரகசியமாக கூறப்படுகிறது.
ஏனெனில்,முன்னதாக தேர்தல் நேரத்தில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைப்பயிற்சியை விடாமல் செய்து வந்தார்.குறிப்பாக, சில நேரங்களில் நடைப்பயிற்சி போகும் இடங்களிலேயே தன்னுடைய காலை பரப்புரையைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.அதேபோல், அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் சைக்கிளிங் செய்வதும் வழக்கம்.அதன்படி,முதல்வர் கடைசியாகக் கடந்த ஜூலை 4-ஆம் தேதி முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் சென்றார்.
unknown nodeஇந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeஇதற்கிடையில்,முதல்வர்,மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தினார்.மேலும்,முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரையிலான முதல்வரின் இந்த பயணத்தில் மக்களுடன் அவர் உரையாடினார்.
unknown nodeஅங்கிருந்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.