எல்.முருகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

L Murugan's assets are worth Rs 2.64 crore, immovable assets worth Rs 1.14 crore and movable assets worth Rs 1.53 crore.

எல்.முருகனின் சொத்து மதிப்பு ரூ.2.64 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.1.14 கோடி என்றும், அசையும் சொத்து மதிப்பு ரூ.1.53 கோடி என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இதனையடுத்து எல்.முருகன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்பொழுது அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தது. அப்பொழுது அவரின் சொத்துமதிப்பு ரூ.2.64 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.1.14 கோடி என்றும், அசையும் சொத்து மதிப்பு ரூ.1.53 கோடி என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையிருப்பு தொகையாக ரூ.45,000 உள்ளதாகவும், அவரின் மனைவியிடம் ரூ.75,000 உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்மீது காவல் நிலையங்களில் 21 வழக்குகள் பதுவாகியுள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.