பிரிட்டன் தொடர்பு: பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மூன்று பேருக்கு கொரோனா உறுதி.!

UK contact Corona confirms three people who were in contact with those who came to Tamil Nadu from Britain

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

இதனால் இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் இந்த புதிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் பரவிவருகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 28 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதாவது, இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்கும் என விளக்கம் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.