மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விதிமீறும் டாஸ்மாக் கடைகளை மூடலாம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் டாஸ்மாக் கடைகளை அரசு மூடுகிறது என்றும், விதிகளை மீறி செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து செயல்பட அரசு அனுமதிக்கிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது, கோவில், பள்ளி, கல்லூரி வளாகங்கள் அருகில் டாஸ்மாக் செயல்பட கூடாது என்பது அரசு விதி. அதனை மீர் செயல்படும் கடைகள் இன்னும் செயல்படுகிறது என்றும், விதிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் 500 கடைகளை தமிழக அரசு மூடியுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு வழிவகை செய்துள்ளது என கூறியிருந்தது. இதனை ஏற்று, மனுதாரரை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்குமாறு கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
