TNPSC – குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

Publication of new syllabus website for exams including TNPSC Group-2, Group-2A, Group-4.

TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு.

TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்-2A தேர்வுக்குக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சியிலும் வெளியிடப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குருப்-2, குருப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு மற்றும் குருப்-4, குருப்-3, குருப்-7-பி, குருப்-8 மற்றும் சிறை அலுவலர் தேர்வு, உதவி சிறை அலுவலர் தேர்வு ஆகியவற்றுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான  புதிய பாடத்திட்டம்www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனிடையே. கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.